Pages

Monday, June 30, 2014

விவசாயிகளுக்கு மட்டும் இலவச மின்சாரம் வழங்கபடுவது ஏன்? நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சியில் மாணவியின் ருசிகர கேள்வி

சிவகங்கை  மாவட்டம்  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழகத்திலேயே முதன் முறையாக பள்ளி மாணவர்களின் மூலமாக பெற்றோருக்கு மின்கட்டண தகவலை எஸ்.எம்.எஸ்.செய்வது தொடர்பான விழிப்புணர்வு கலந்தூரையாடல்   நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .7 ம் வகுப்பு மாணவி தனம் வரவேற்றார்.தேவகோட்டை பகுதி மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.சந்திரசேகரன் எஸ்.எம்.எஸ்.மூலமாக மின்கட்டண தகவலை தெரிவிப்பது தொடர்பாக முதலில் தனது கைபேசி எண்ணை அனைவரையும் குறித்து கொள்ள சொன்னார்.(9445853086) தேவகோட்டை நகர மக்கள் எந்த நேரமும் மின்சார உதவி தொடர்பாக இந்த எண்ணில் தன்னை அழைக்கலாம் என தெரிவித்தார்.தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டுள்ள குறுந்தகவல் அனுப்புதல் மூலமாக  20 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் 3 நாள் முன்னதாக மறுதகவல் அனுப்பப்படும்.05​ - என்பது  மதுரை மண்டலம் ,415 என்பது தேவகோட்டை நகர் ,பகிர்மானம் என் A பகுதி 001 எனவும் ,B  பகுதி  ... எனவும்,அதன்பிறகு மூன்றிலக்க அல்லது நான்கிலக்க எண்ணோ இருக்கும்.இந்த எண்ணை பிறந்த தேதி போல ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.உங்களுடைய பெற்றோர்களிடம் கூறி கைபேசி எண்ணை மின்சார வாரியத்தில் கொடுக்க சொல்லுங்கள் என கூறினார்.

வேறு ஏதாவது விபத்து ஏற்பட்டால் சரியாகிவிடும்.ஆனால் மின்சார விபத்து ஆபத்தானது.மாணவர்களாகிய நீங்கள் விளையாட்டு தனமான எண்ணத்தோடு தொடுதல் கூடாது.டம்மி ப்லக் காண்பித்து அதனை சிறுவர்கள் தொடாமல் இருப்பது  தொடர்பாக விளக்கினார்.பெண்கள் வீடுகளில் கிரைண்டர் பயன்படுத்தும் முறை பற்றி கூறினார்.மாணவர்கள் நீங்கள் வீதியில் உள்ள மின்கம்பத்தை சுற்றி சுற்றி விளையாடுவீர்கள்.அவ்வாறு செய்தல் கூடாது.மின்கம்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை அவசியம் அடுத்தவர்க்கு எடுத்து கூறுதல் அனைவரின் கடமையாகும்.

வீடுகளில் ப்யூஸ் போய்விட்டால் அதற்கென உள்ளவரைதான் அழைக்க வேண்டும்.மின்சாரம் வருகிறதா என்பதை சோதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் கையை நேராக கொண்டுபோய் அதனில் வைக்க கூடாது.கையின் பின்புறம் புறங்கையை லேசாக பக்கத்தில் கொண்டுபோனாலே தெரிந்து விடும் .

நிகழ்ச்சியில் உமாமகேஸ்வரி என்ற மாணவி திருவிழாவின்போது சில இடங்களில் மின்சாரத்தை கொக்கி போட்டு எடுத்து பயன்படுத்துகிறார்கள் அதனை தடுப்பது எப்படி? என கேள்வி எழுப்பினார்.அதனை தடுக்க அரசு தக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது என தெரிவித்தார்.

தனலெட்சுமி என்ற மாணவி,விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இலவச மின்சாரம் வழங்கபடுகிறது?என கேள்வி எழுப்பினார்.அருமையான சந்தேகம் ! சிந்திக்க வேண்டும்.விவாசயத்திற்கு அனைத்துக்கும் பணம் தேவைப்படுகிறது.விவசாயி வேலை செய்யாவிட்டால் நம் கதி எனா ஆவது? எனவே தான் இலவச மின்சாரம் வழங்கபடுகிறது என பதில்  கூறினார்.    

மாணவிகள் பரமேஸ்வரி, ஜெனிபர், சொர்ணம்பிகா, கிருஸ்ணவேணி ,சமயபுரத்தாள் ,மாணவர்கள் ரஞ்சித்,மணிகண்டன்,நடராஜன் ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு பதில் பெற்றனர்.நிறைவாக மங்கையர்க்கரசி,விக்னேஷ்,போன்றோர் நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் அறிந்துகொண்டதை கூறினார்.பாலிடெக்னிக் கல்லுரி மாணவர்களை காட்டிலும் நடுநிலைப் பள்ளி மாணவர்களாகிய நீங்கள் நிறைய கேள்விகள் கேட்பது பாராட்டுதலுக்குரியது என்று தெரிவித்தார்.நிகழ்ச்சிகளை ஆசிரியை சாந்தி தொகுத்து வழங்கினார்.மாணவர் முனீஸ்வரன் நன்றி கூறினார். 

          பட விளக்கம்  :1)  0972- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு மின்சார வாரிய தேவகோட்டை மின் பகிர்மான உதவி செயற்பொறியாளர் எஸ்.சந்திரசேகரன் மாணவ மாணவியருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் மின் கட்டண தகவல் தெரிவித்தல் மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்

2) 0993 , 0999- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு மின்சார வாரிய தேவகோட்டை மின் பகிர்மான உதவி செயற்பொறியாளர் எஸ்.சந்திரசேகரன் மாணவ மாணவியருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் மின் கட்டண தகவல் தெரிவித்தல் மற்றும் மின் பாதுகாப்பு  தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

1 comment:

  1. Fantastic program conducted by school.I congratulate the students,staffs and JE for cooperation to conduct such program.All schools wants to think to conduct some different program to teach their students to gather a genernal and experienced knowledge.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.