Pages

Thursday, June 19, 2014

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: தேர்வர்கள் கவனத்திற்கு..

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் அதற்கான விண்ணப்பத்தை தனித்தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். நடப்பு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனித்தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்து பாடங்களையும் எழுத உள்ளவர்கள்), ஏற்கனவே 2012க்கு முன் பழைய பாடத்திட்டத்தில் எழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வியுற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பெயர் பதிவு செய்திராத, தனித்தேர்வர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.


அனைத்து தனித்தேர்வர்களும் இம்மாத இறுதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளில் சென்று செய்முறை வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே, தற்போது பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத தேர்வரின் விண்ணப்பம், இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத்தேர்விற்கு ஏற்க இயலாமல் நிராகரிக்கப்படும்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 23ல் தமிழ் முதல் தாள் தொடங்குகிறது. ஜூன் 24ல் தமிழ் இரண்டாம் தாள், ஜூன் 25ல் ஆங்கிலம் முதல் தாள், 26ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 27ல் கணக்கு, 28ல் அறிவியல், 30ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன.

இதற்கான விண்ணப்ப படிவத்தை www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதனை பூர்த்தி செய்து, இரண்டு நகல் எடுத்து, இம்மாதம் 30ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.