Pages

Sunday, June 22, 2014

விடுப்புக்கால பயணச் சலுகை திட்டத்தில் ஊழல்... மத்திய நிதித்துறை அமைச்சக ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சிறை

விடுப்புக்கால பயணச் சலுகை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய நிதித்துறை அமைச்சக ஊழியர்கள் இருவருக்கு டெல்லி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. போலியாக பில்கள் தயாரித்து ரூ.4.20 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டது.
நிதித்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் பாலே சிங் சகானா, பகவான் சிங் என்ற இருவரும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மூவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நிதித்துறையில் பணியாற்றி தற்போது ஊரக மேம்பாட்டுத் துறையில் பணியாற்றும் தாஸ் நாயக் என்பவருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக விடுப்புக்கால பயணச் சலுகை திட்டத்தில் மோசடி நடைபெற்றிருப்பதாக நிதித்துறை அமைச்சக சார்பு செயலாளர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தது. 44 பில்களை போலியாக தயாரித்ததாக அவர்கள் மீது சி.பி.ஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் மத்திய அமைச்சக ஊழியர்கள் 3 பேர் உட்பட 6 பேருக்கு சிறை தண்டனை விதித்தது ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.