Pages

Tuesday, June 24, 2014

முன்னாள் அமைச்சர் கபில் சிபல் குடிபோகும் வீட்டின் ஒரு மாத வாடகையே ரூ.16 லட்சமாமே!!!!

முன்னாள் சட்டம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் மாதம் ரூ.16 லட்சத்திற்கு வாடகை வீடு எடுத்துள்ளார். முன்னாள் சட்டம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தான் குடியிருக்கும் அரசு பங்களாவை வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்குள் காலி செய்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் டெல்லி ஜோர்பாக்கில் ஆயிரத்து 250 சதுர அடியில் உள்ள சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
அந்த வீட்டின் ஒரு மாத வாடகை ரூ.16 லட்சம் ஆகும். டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் சித்தார்த் சரீனுக்கு சொந்தமான வீட்டில் தான் சிபல் வாடகைக்கு குடிபோகிறார். முன்னதாக சந்திரசேகர் அரசில் அமைச்சராக இருந்த மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் கமல் மொரார்கா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிபல் தற்போது குடிபோகும் அதே தெருவில் உள்ள ஒரு வீட்டை ரூ.18 லட்சத்திற்கு வாடைக்கு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிபல் வாடைகைக்கு எடுத்துள்ள இந்த புதிய வீட்டில் அவரது சட்ட அலுவலகமும் செயல்படும். மன்மோகன் சிங் அமைச்சரவையில் உறுப்பினர் ஆகும் முன்பு சிபல் பிரபல வழக்கறிஞராக இருந்தார். அவர் பிர்லாக்கள் மற்றும் பெப்சி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். சிபல் வீடு எடுத்துள்ள லுட்யென்ஸ் பகுதியில் மேலும் சில முன்னாள் அமைச்சர்களும் வீடு தேடுவதால் அங்கு வாடகை பலமடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் பங்களாக்களில் 10 சதவீதம் தனியாருடையது. மீதமுள்ள பங்களாக்கள் அரசுக்கு சொந்தமானவை.

2 comments:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.