Pages

Friday, June 20, 2014

10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வித்தியாச முயற்சி

10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அம்மாநில அரசு, வித்தியாசமான முயற்சிகளை துவக்கி உள்ளது.


அதிகாலையில், மாணவர்களை படிப்பதற்கு எழுப்பி விடும்படி, அவர்களின் பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு விடுக்கும்படி, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக, கிம்மன் ரத்னாகர் பதவி வகிக்கிறார். இவர், தட்சண கன்னடா மாவட்டத்தில், சமீபத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து, பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை கேட்டார். இதன் அடிப்படையில், புதிய முடிவு ஒன்றை அவர் எடுத்துள்ளார்.

இதன்படி, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு, அவர்களின் ஆசிரியர்கள் மூலமாக, தினமும் அதிகாலை 5:00 மணிக்கு, மொபைல் போன் மூலமாக அழைப்பு வரும். அப்போது, ஆசிரியர்கள், உங்கள் பையன் படிப்பதற்கு எழுந்து விட்டானா? இல்லையெனில், எழுப்பிவிட்டு, படிக்கச் சொல்லுங்கள் என, அறிவுறுத்த உள்ளனர்.

முதல் கட்டமாக, தட்சண கன்னடா மாவட்டத்தில் மட்டும், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளனர். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மாநிலம் முழுவதும், இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.