சேலம் நாராயணநகர் பாவடி பகுதியில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு பெரிய மைதானம் உள்ளது. பள்ளியை சுற்றிலும் மரங்கள் அதிகம் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் பலரும் இங்கு வந்து நடைபயிற்சி செல்கிறார்கள்.
இன்று அதிகாலை திரளானோர் இந்த பள்ளிக்கு வந்து நடை பயிற்சிக்கு செல்ல முயன்றனர். அப்போது பள்ளியின் கேட் பகுதியில் ஒருவர் நின்று கொண்டு நடை பயிற்சி செல்ல இனி மாதாமாதம் ரூ.50 தர வேண்டும். டெபாசிட்டாக ரூ.100 தரவேண்டும் என்றார். இதை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரிடம் அவர்கள், இந்த பள்ளி மாநகராட்சி பள்ளி. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நடை பயிற்சி செல்ல கட்டணம் வசூலிக்க யார் உங்களுக்கு உரிமை தந்தது என கேட்டு தகராறு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அக்கம் பக்கம் வசிப்பவர்களும், மாணவ, மாணவிகளும் அங்கு திரளாக வந்தனர்.
இதனால் அச்சம் அடைந்த பணம் வசூலித்தவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து நடை பயிற்சிக்கு வந்த சிலர் கூறியதாவது:–
இந்த பள்ளிக்கு அதிகாலை நேரத்தில் திரளானோர் வந்து நடந்து செல்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் வந்து நடைபயிற்சி செய்கிறார்கள். இன்னும் சிலர் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியும் செய்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்குள் நுழைய ரூ.100 கட்டணம் திடீரென வசூலித்தனர். இதை கண்டித்தோம். இதனால் பணம் வசூலித்தவர் ஓடிவிட்டார். இவர் மீது பள்ளி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பள்ளிக்குள் வந்து நடை பயிற்சி செல்ல வழிவகையும் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.