நேற்று காலை 11மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் திருமிகு.செ.முத்துசாமி,Ex.MLC., அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது மாநில பொருளாளர் திரு.அலெக்சாண்டர்,மாநில துணைத் தலைவர்கள் திரு.கே.பி.ரக்ஷித், திரு.முருகேசன் மற்றும் தலைமை நிலைய செயலர் திரு.க.சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும்
என கேட்கப்பட்ட பொழுது, இயக்குனர் அவர்கள் கலந்தாய்வுக்கான நாட்கள் குறித்து அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும்,அனுமதி கிடைத்தவுடன் கலந்தாய்வுக்கான அட்டவனை மற்றும் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வும்,பணிநிரவலும் நடைபெறும் என தெரிவித்தார்
ithu unmaiyana newsa? bt promotion nadakuma? kadauluke theriyathu
ReplyDeleteeppa paru poi solradu....
ReplyDelete