Pages

Saturday, May 17, 2014

பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டி.இ.டி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சார்பாக விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய வெயிட்டேஜ் கணக்கீடு வர வாய்ப்பு

இன்று பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தலைமையில் முக்கிய விவாதம் நடைபெற்றது, இதில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்தும், பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தும்,ஆசிரியர் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அனைத்து சி இ ஓக்களிடம் அலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வகையான வெயிட்டேஜ் முறையினை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து நாளையும் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் டி இ டி தொடர்பான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்பட்டு அடுத்த 10நாட்களுக்குள் இறுதிப்பட்டியல் வெளியடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த திங்கள் அன்று டி.இ.டி எழுதிய ஒரு சாரார் தலைமை செயலகத்தில் தேர்வில் 90மதிப்பெண் மேல் பெற்றவர்கள் மனு அளித்ததும் அது குறித்து 17ம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று உறுதி அளித்ததும் நினைவிருக்கலாம்.

3 comments:

  1. Amma ungalai transfer pannivittall all posting fill up panni vidalm

    ReplyDelete
  2. Silarin vazhkai kattril aadum nool aruntha pattamagi ponathu. Meedam ullavargalaiyavathu kappatravum.

    ReplyDelete
  3. If any G.O pass in time about teacher's posting, It will be a very glad news to the candidates who passed in TET and it will be useful for students too...

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.