ஓவிய ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில், 207 பேர் தேர்வெழுதினர். தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு துவங்கியது. அரசுத்தேர்வு துறை மூலமாக, ஓவிய ஆசிரியர்களை தேர்வு செய்ய, என்லார்ஜ்மெண்ட் டிராயிங் டிசைன், ஜாமெண்டரி டிசைன், பெயிண்டிங் டிசைன், இன்டீரியல் மற்றும் டெக்ஸ்டைல் டிசைனிங் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படுகிறது.
என்லார்ஜ்மெண்ட் டிசைனிங்கில், அவுட்லைன் டிராயிங், மாடல் டிராயிங், மெமரி டிராயிங் மற்றும் ஹியூமன் டிராயிங்கான டெக்னிக்கல் தேர்வு நடத்தப்படும். ஹயர் தேர்வில் நான்கு, லோயர் தேர்வில் மூன்று பாடத்துக்கும் டெக்னிக்கல் தேர்வு நடைபெறும். தகுதித்தேர்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்படுவோர், டி.டி.சி., (டெக்னிக்கல் டீச்சர் கோர்ஸ்) பங்கேற்று இறுதி தேர்வு எழுதி, அரசு பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் பணியில் அமர்த்தப்படுவர்.
ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்தது. ஹயரில் 191, லேயரில் 16 பேரும் தேர்வு எழுதினர். நேற்று என்லார்ஜ்மெண்ட், மாடல் மற்றும் மெமரி டிராயிங் தேர்வு நடந்தது. இன்று ஹியூமன் டிராயிங் தேர்வு நடக்கிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.