Pages

Wednesday, May 28, 2014

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் சேவை வேகம் அதிகரிப்பு

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவை உட்பட இன்டெர் சேவையின் வேகம் ஜூன் 1ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனமான சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த பல்வேறு அகன்ற அலைவரிசை இணையதளத்தின் பதிவிறக்க வேகம் 256கேபியில் இருந்து 512கேபியாக உயர்த்தப்படுகிறது.வீடுகளுக்கான அளவில்லா இணையதள சேவை பெறும் மாத வாடகை 525 திட்டத்தின் கீழும், தொலைபேசி சேவையுடன் கூடிய அளவில்லா அகன்ற அலைவரிசை இணையதள சேவையான மாத வாடகை 650 திட்டத்தின் கீழும் உள்ள இணைப்புகளின் பதிவிரக்க வேகம் சராசரியாக 512கேபியாக இருக்கும்.
முன்பு இந்த சேவையில் குறைந்த பட்சம் 256கேபியாக இருந்தது.இதேபோல் தொலைபேசியுடன் அளவில்லா அகன்ற அலைவரிசை இணையதள சேவையான மாத வாடகை 1800, 2250 ஆகியவற்றிலும் குறைந்த பட்சம் பதிவிறக்க வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இப்படி பயன்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களுக்கான வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இணைப்புகளுக்கு மட்டுமின்றி இந்த திட்டங்களின் கீழ் புதிதாக இணைப்பு பெறுபவர்களுக்கும் இந்த மாற்றங்கள் பொருந்தும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.