கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராகிறார். இன்று மாலை நரேந்திர மோடியுடன், பொன். ராதா கிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு இணை அமைச்சர் பதவி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அருண் ஜெட்லிக்கு நிதித்துறையும், ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்டத்துறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சுஷ்மா ஸ்வராஜ், ராம்விலாஸ் பாஸ்வான், வி.கே. சிங்குக்கு கேபினட் அந்தஸ்தில் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. அசோக் கஜபதி ராஜு, ஆனந்த் கீதே ஆகிய கூட்டணி தலைவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. 18 கேபினட் உள்பட 34 அமைச்சர்களுக்கான பட்டியல் ஜனாதிபதிக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. 34 அமைச்சர்களும் இன்று மாலை மோடியுடன் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.