Pages

Thursday, May 29, 2014

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு

பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர் சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை:
அதன்படி, ஆரம்ப பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்ற வீதத்திலும், 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 1:35, 9ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 1:40 என்ற வீதத்தில் இருக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், அறிவியல் பிரிவு வகுப்பாக இருந்தால், 1:40 என்ற வீதத்திலும், தொழிற்கல்வி பிரிவு வகுப்பாக இருந்தால், 1:25 என்ற வீதத்திலும் இருக்கலாம் என, கணக்கு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய வரையறையை விட, ஆசிரியர் - மாணவர் சதவீதம், குறைவாகவே உள்ளது. ஆரம்ப பள்ளிகளில், 10 முதல், 20 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை, பல இடங்களில் உள்ளது. தேவையை விட, பல பள்ளிகளில், கூடுதல், ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அதே நேரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை, அதிகமாக உள்ளது. இந்த சமநிலையற்ற நிலையை மாற்றி, அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில், பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. தேவையை விட, கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர் எண்ணிக்கை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து, இரு துறைகளும் விவரம் சேகரித்துள்ளன.
பள்ளி திறப்பதற்குள்...:
அதனடிப்படையில், இரண்டிலும், கூடுதலாக உள்ள, 3,000 பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, இரு துறை அதிகாரிகளும், முடிவு செய்துள்ளனர். பள்ளி திறப்பதற்குள், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என, தெரிகிறது. இந்தப் பணி முடிந்த பின், ஜூன், இரண்டாவது வாரத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என, தெரிகிறது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணி நிரவல் (டெப்ளாய்மென்ட்) நடவடிக்கையால், ஆசிரியர்கள், பீதி அடையத் தேவையில்லை. தற்போது ஆசிரியர் பணிபுரியும் மாவட்டத்திற்குள் தான் மாற்றம் இருக்கும். வேறு மாவட்ட மாறுதல், பெரும்பாலும் வராது' என்றார்.

1 comment:

  1. When is the deployment counselling expected? I heard from reliable sources that it would be conducted tomorrow (30/05/2014). Is it true? And can you please publish the vacant list for tiruvannamalai district if possible?

    Thank you.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.