Pages

Thursday, May 1, 2014

தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவு செய்வதில் தாமதம்

தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய தாமதமானதால் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து வந்தவர்கள் விண்ணப்பம் கொடுக்க முடியாமல் தவித்தனர். கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான
விண்ணப்பங்களை, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வழங்கி அவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கல்வித் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று மாவட்டத்தில் ஓவியம், வேளாண்மை, தையற்கலை, இசை போன்ற தொழிற்கல்வி படித்த மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்விச் சான்றிதழ்களை பதிவு செய்ய நேற்று காலை கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் குவிந்தனர். விண்ணப்பம் கொடுப்பதற்கு வரும் 3ம் தேதி வரை அவகாசம் இருந்தாலும் நேற்று 200க்கு மேற்பட்டோர் குவிந்தனர். நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே இண்டர்நெட் வசதியுள்ளதாலும், விண்ணப்பங்களை சரி பார்த்து வாங்க வேண்டியிருந்ததாலும் தாமதம் ஏற்பட்டது. இதனால், நேற்று காலை முதல் மாலை 4:00 மணி வரை 40 விண்ணப்பங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. இதனால் வந்திருந்தவர்களை நாளை (2ம் தேதி) வரும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கடைகோடியிலிருந்து வந்தவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.