Pages

Wednesday, May 21, 2014

75 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள்

பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் டி.எல்.எப்., இந்தியா, அட்லாண்டா, பி.இ.விலோமோரியா உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட கட்டட பொறியியல் துறைக்கான நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்கள் வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர்.


முகாமில், ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் பல்வேறு துறைகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 75 மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ரமணியம் பணி நியமன ஆணைகள் வழங்கினார். முகாமில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சந்திரசூடன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.