தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக 40 பி.எட். கல்லூரிகளுக்கு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ.,) அனுமதி வழங்கி உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் ஏற்கனவே 657 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு மேலும் 40 புதிய பி.எட். கல்லூரிகளுக்கு என்.சி.டி.இ. அனுமதி வழங்கி உள்ளது. அக்கல்லூரிகள், இன்னும் எங்களிடம் இணைப்பு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கவில்லை.
பல்கலைக்கு சென்னை - பழைய மாமல்லபுரம் சாலையில், காரப்பாக்கத்தில் 10 ஏக்கர் இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. ஐந்து தளங்களுடன், மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவில், அடுத்த ஆறு மாதங்களில் பல்கலை கட்டடம் கட்டி முடிக்கப்படும். பல்கலை, ஆண்டுதோறும் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது. இந்த ஆண்டு "கம்ப்யூட்டர் உலகத்திற்கு அப்பாற்பட்டு, படைப்பாற்றல் மிக்க சமுதாயத்திற்கு, வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கான புதுமைகளை படைத்தல்" என்ற தலைப்பில் மூன்று நாள் மாநாடு சென்னையில் (நாளை 19ம் தேதி) முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இதில், 200க்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு, விஸ்வநாதன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.