Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 20, 2014

    கீழ் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சியே பிளஸ் 2 தோல்விக்கு காரணம்; முதுநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம்

    கீழ் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி பெற வைப்பதால்தான், மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியில், குறைந்த சதவீதத்தை அடைகின்றனர். இதற்கு தலைமை ஆசிரியர்களை மட்டும் குறை கூறுவதை ஏற்க முடியாது, என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் பிளஸ் 2 பொது தேர்வில், 95.14 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 6-வது இடம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு தேர்ச்சியை விட, 1.11 சதவீதம் அதிகம். ஆனால், தேர்ச்சி அளவு 80 சதவீதத்துக்கு குறைவாக உள்ள மூன்று பள்ளிகளின், தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
    இதை பல்வேறு ஆசிரியர் அமைப்புகளும், கண்டித்து வருகின்றன. இதற்கு மாணவர்களும் ஒரு காரணம், தலைமை ஆசிரியர்களை மட்டும் குறை கூறுவதில் நியாயமில்லை என ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: தேர்ச்சி விகிதம் குறைய ஆசிரியர்கள் மட்டுமே காரணம் அல்ல. பல அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பு, வசதியின்மை, கீழ் வகுப்புகளில் கட்டாய முழு தேர்ச்சி, தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க கூட முடியாத சூழ்நிலை, மாணவர்களை நெறி படுத்துவதற்கான நல்லொழுக்க வகுப்புகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்காத நிலை, ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகின்ற இதர பல பணிகள் போன்றவைதான்.
    இவைகளை கருத்தில் கொள்ளாமல், ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்ததை, தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையேல், தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.

    5 comments:

    OKKODAI.IN said...

    TUESDAY, MAY 20, 2014 ஃபர்ஸ்ட் ந்யூஸ் படித்து பார்க்கவும் அதுவும் ஒரு காரணம் .

    Anonymous said...

    Yes its true.

    Anonymous said...

    sir please konjam yosinga tenthla pass panna manavargalukku thane neenga padam nadathuringa first standard manavargalukku illaye????

    Anonymous said...

    Yes its true.

    OKKODAI.IN said...

    உண்மைதான் 350 மார்க் எடுத்தா ஈரோடு ,நாமக்கல் ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் க்ரூப் தருவாங்களா ? நாம் எல்லாம் ஜஸ்ட் 275 மார்க்கு கூட ஏதாவது ஒரு க்ரூப் கொடுப்பது இல்லயா ? நாமும் 450 மார்க் எடுத்தவனுக்கு தான் ஃபர்ஸ்ட் க்ரூப் 400 மேல தான் ஏதாவெது ஒரு க்ரூப் கொடுக்கப்படும் என்றால் நாமும் கண்டிப்பாக 100 சதம் எடுப்போம் . அவர்கள் 11 வது வகுப்பை நடத்துவது இல்லை.11 இல் எல்லாம் 12 வகுப்பு சிலபஸ் . 2ஆண்டுகள் +2 படித்து 100 சதம் இல்லயே ?
    12 வது தேர்வில் இந்த முறை தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் , அலுவள்ர்கள் முதல் மற்ற பள்ளிகளுக்கு அனுப்பபட்டதால் தனியார் (மெட்ரிக்) பள்ளிகள் அதிக்க அளவில் தனி மாணவன் மத்ப்பெண் சரிந்து விட்டது .. இல்லை என்றால் ஒரே பள்ளியில் 60 மாணவர்களில் ,1100 மேல் 20 மாணவர்கள் 1000 க்கு 40 மாணவர்கள் என விளம்பரம் வரும் . 11 வது மதிப்பெண்ணுடன் 12 வது மதிப்பெண் சேர்த்து தான் +2 CONSOLIDATE மதிப்பெண் என்றால் மாணவர்கள் தரமான கல்வி கற்று சிறந்த சமுதாயத்தை உருவாக்கிட முடிஉம் . 11 படிப்பது இல்லை என்றால் போட்டி தேர்வுகளில் (TET , TNPSC ) எவ்வாறு வெற்றி பெற இயலும் ?. நம்மை அவர்களுடன் ஒப்பிடக்கூடாது . இது படிப்பில் பின் தங்கிய மற்ற பள்ளிகளில் புறக்கணிக்கப்பட்ட ஏழை மாணவர்களின் பள்ளி . ஒப்பிட நேர்ந்தால் நாம் வளர்ந்து விட்டோம் .