விருதுநகர்:'பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில்,
மதிப்பெண் குறைந்தாலும், மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் வழங்கப்படும்'
என, அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன்
உத்தரவு விபரம்:பிளஸ் 2 விடைத்தாள்
மறுகூட்டலில்,
வினா மற்றும்
பக்கவாரியாக மதிப்பெண் மறுகூட்டல் செய்யப்படும்.
இதில்,
மதிப்பெண் கூடுதலாக வந்தால் மட்டுமே, கணக்கில்
கொள்ளப்படும்.ஒரு விடை, மதிப்பீடு
செய்யப்படாமல் அல்லது திருத்தப்படாமல் அல்லது
திருத்தப்பட்டும் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்தால் மட்டுமே, உரிய மதிப்பெண் வழங்கப்படும்.
விடை மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தால், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படாது.மறுகூட்டலில், மதிப்பெண் உயர்ந்தால் மட்டுமே கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படும்; மதிப்பெண் குறைந்தால், பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும்.
'மறுகூட்டல் மட்டும் போதும்' என
விரும்புவோர், விடைத்தாள் நகல் கோர வேண்டாம்.மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்கு 305 ரூபாய்;
மற்ற பாடங்களுக்கு 205 ரூபாய் கட்டணம் செலுத்தி,
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.மறுமதிப்பீடு: மறுமதிப்பீட்டில் கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டாலோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட
மதிப்பெண் குறைக்கப்பட்டாலோ, விண்ணப்பதாரருக்கு திருத்தம் செய்யப்பட்ட, புதிய மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படும். மாணவர்கள் பள்ளி மூலமும், தனித்தேர்வர்கள்
தேர்வு மையம் மூலமும், விடைத்தாள்
நகல்கோரி, இன்று (மே 14) மாலை
5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பின், அறிவிக்கப்படும் தேதியில், விடைத்தாள் நகலை இணையதளம் மூலம்
பதிவிறக்கம் செய்து, பாட ஆசிரியர்களிடம்
காண்பிக்க வேண்டும். கூடுதல் மதிப்பெண் பெற
வாய்ப்பு இருந்தால் மட்டுமே, விடைத்தாள் நகல் பெற்ற மூன்று
நாட்களுக்குள், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 2 க்குள் உரிய
விடைத்தாள் நகல்கள், பதிவேற்றம் செய்யப்படும்.விண்ணப்பதாரர், ஒப்புகைசீட்டில் உள்ள குறியீட்டு எண்ணை
பதிவு செய்து, விடைத்தாள் நகலை
பதிவிறக்கம் செய்யலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டல் இதில் ஏதேனும் ஒன்றைத்தான்
கோரமுடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment