Pages

Friday, May 23, 2014

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:
கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை நடக்க வேண்டியுள்ளது. 

பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வேண்டிய புத்தகங்கள் வந்து சேரவில்லை, கோடை வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது போல இந்த ஆண்டும் ஒத்தி வைக்குமாறு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் பிச்சையிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். அரசு பரிசீலனை செய்து 9ம் தேதிக்கு பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறுகையில், ஏற்கெனவே அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

5 comments:

  1. palligal epothum pol thirappathe nallathu.

    ReplyDelete
  2. when will they conduct Teachers counselling?

    ReplyDelete
  3. 15000 teacher ilama school reopen panreenga...already last year 15000 insufficient...good job then how govt school get good name among soceity.

    ReplyDelete
    Replies
    1. Plz c 10 th 12th govt scl result.

      Delete
  4. Pl s don't change the school reopen date

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.