Pages

Thursday, May 22, 2014

உதவித்தொகை மோசடி விவகாரம்: தலைமை ஆசிரியர்களிடம் 2வது நாளாக விசாரணை

சுகாதாரக்குறைவாக தொழில்செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1750 கல்வி உதவித்தொகை அளிக்கிறது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை நிர்வாகம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களின் பெற்றோரிடம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகையில் ரூ.68 லட்சம் முறைகேடு நடந்திருப்பதை அப்போதைய கலெக்டர் குமரகுருபரன் கண்டுபிடித்தார். 

பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளும் சுகாதாரகுறைவான தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகள் என பட்டியல் தயார் செய்து, தலைமை ஆசிரியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக 77 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் 51 பேர் பெண் ஆசிரியைகள். 7 மாத கால போராட்டத்துக்கு பின் 67 தலைமை ஆசிரியர்கள் மட்டும் மீண்டும் பணியில் சேர்ந்தனர்.

10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதால் பணியில் சேர்க்கவில்லை. சஸ்பெண்டாகி பணிக்கு சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள சேலம் மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் தலைமையில் தனி விசாரணைக்குழுவை தொடக்ககல்வி இயக்குனர் அமைத்துள்ளார். விசாரணை குழுவினர் நேற்று முன்தினம் 9 தலைமை ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.நேற்று 2வது நாளாக நாமகிரிப்பேட்டை, கபிலர்மலை ஒன்றியங் களை சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களிடம் விசாரித்தனர். விசாரணையின் போது குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.