மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்
குறைந்தது தொடர்பாக அனைத்து தலைமையாசிரியர்களிடமும் கல்வித்துறை சார்பில்
விளக்கம் கேட்கப்பட்டது. மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்
இந்தாண்டு 92.34 சதவீதம். இது, கடந்தாண்டை விட
1.43 சதவீதம் குறைவு. மேலும், மாநில
அளவில்
8வது இடத்தில் இருந்த மதுரை, இந்தாண்டு
16வது இடத்திற்கு
தள்ளப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்க அனைத்து தலைமையாசிரியர்கள்
கூட்டம், முதன்மை கல்வி அலுவலர்
அமுதவல்லி தலைமையில் நடந்தது. பிளஸ் 2 தேர்வில், தமிழ்,
ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணக்குப்
பதிவியல், பொருளியல் ஆகிய பாடங்களின் தேர்ச்சி
விகிதம் குறைந்ததும், ஒட்டுமொத்த தேர்ச்சி குறைய காரணமாக அமைந்ததாக,
முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
மேலும், கடந்தாண்டை விட 29 அரசு பள்ளிகள்,
25 மெட்ரிக் பள்ளிகள், 20 உதவி பெறும் மற்றும்
7 பகுதி உதவி பெறும் பள்ளிகள்,
3 கள்ளர், 3 ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் 5 மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்த பட்டியலையும்
வெளியிட்டு, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களை தனித்தனியாக விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதில்,
'அரசு பள்ளிகளில் மாணவர்கள் சரியாக வருவதில்லை. ஆசிரியர்கள்
சொல்பேச்சை கேட்பதில்லை. அடிக்கக்கூடாது. திட்டக்கூடாது போன்ற காரணங்களால் கண்டிக்க
முடியவில்லை. தனியார் பள்ளிகளில் இடம்
கிடைக்காத குறைந்த மதிப்பெண் பெற்ற
மாணவர்கள் தான் அரசு பள்ளிகளில்
சேருகின்றனர்...' போன்ற காரணங்களை அடுக்கினர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், 'வகுப்பிற்கு மாணவர்களை வரவைப்பதும், தேர்ச்சியை அதிகரிப்பதும் உங்கள் கடமை. அதில்
இருந்து தவறக்கூடாது,' என்றனர். பின் சி.இ.ஓ., கூறுகையில், "இந்தாண்டு
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உங்களுக்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பள்ளி துவங்கியதும் பாடத்தை
ஆர்வத்துடன் நடத்த வேண்டும். அரையாண்டு
தேர்வு வரை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள்
விடுப்பு எடுப்பதை தியாகம் செய்து, தேர்ச்சியை
அதிகரிக்க வேண்டும்," என்றார்.
பட்டியல்
தயார் : கூட்டத்தில், தேர்ச்சி குறைவான பாடங்களில், சம்பந்தப்பட்ட
பள்ளிகள் வாரியாக ஆசிரியர்கள் பெயர்
பட்டியலை தயாரிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவர்களிடம் விளக்கம் கேட்கவும், விரைவில் இந்த ஆசிரியர்களுக்கு மட்டும்
சிறப்புக்கூட்டம் நடத்தவும் கல்வி அதிகாரிகள் முடிவு
செய்துள்ளனர். இதனால், ஆசிரியர்கள் கலக்கத்தில்
உள்ளனர்.
No comments:
Post a Comment