Pages

Saturday, May 31, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி
பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கா மல் விடுபட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் மற்றும் பயோடேட்டா போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை ஒசிபிஎம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை போன்று ஜெயராணி பெண்கள் மேல்நிலை பள்ளி சேலம், பிஷப் ஹெர்பர் மேல்நிலை பள்ளி புதூர்& திருச்சி, காமராஜ் முனிசிபல் ஆண்கள் மேல்நிலை பள்ளி விழுப்புரம் ஆகிய இடங்களிலும் அந்தந்த பகுதி மாவட்டங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதற்காக தனியே அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Entru poi nalai va

    ReplyDelete
  2. Vettirke vanthu service seithu tharugirom

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.