Pages

Thursday, May 22, 2014

10ம் வகுப்பு மாணவரை தேர்வு எழுத விடாத பள்ளிக்கு அபராதம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் குடியிருப்பவர் அழகுவேல். இவரது மகன் பிரவின் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். அரசு பொதுத்தேர்வின் போது பிரவினை பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியரும் பரீட்சை எழுத விடாமல் அலைகழிப்பு செய்து விட்டனர்.
தனித்தேர்வு எழுதுவதற்கும் தகுந்த பள்ளி சான்றிதழ் தராமல் இழுத்தடித்தனர். இதையடுத்து மாணவர் பிரவின் பள்ளியின் மீது தேனி நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் மாணவரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதால் இழப்பீடாக னீ1 லட்சம் அபராதமும், உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து தொகை கொடுக்கும் வரையில் 9 சதவீதம் வட்டியும் சேர்த்து தரவேண்டும். மேலும் செலவு தொகையாக னீ5 ஆயிரமும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

1 comment:

  1. மாணவன் ஒழுக்கமானவனா?பள்ளிக்கு சரியாக வந்தானா? அவன் எப்படி இருந்தாலும் அவனுக்குதான் சாதகம்!

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.