சி.பி.எஸ்.இ. 10-வகுப்பு தேர்வு நாடு முழுவதும் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலங்களின் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மதிப்பெண் சரிபார்க்க விரும்பும் மாணவர்கள் 21 நாட்களுக்குள் அந்தந்த பிராந்திய அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.