Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 8, 2014

    சம்பள உயர்வு ஆசை காட்டி ஓட்டு சேகரிப்பு : சிறப்பு ஆசிரியர்களுக்கு குறி வைக்கும் அ.தி.மு.க.,

    சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்வதாக கூறி, அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களிடம் ஆளும் கட்சியினர், ஆதரவு திரட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், கம்ப்யூட்டர், உடற்கல்வி பயிற்றுவிக்க, 16,548 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், மாதம், 5,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. வாரத்தில், மூன்று நாள், பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டு முடிந்த நிலையில், சம்பளம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டி, பகுதி நேர ஆசிரியர்கள், சங்கம் அமைத்து, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களை, அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள அ.தி.மு.க.,வினர் கணக்கெடுத்து உள்ளனர். ஓட்டு சேகரிக்க, அவர்களின் வீடுகளுக்கு செல்லும் அ.தி.மு.க.,வினர், "லோக்சபா தேர்தலுக்கு பின், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்படும்; அதன்பின், பணி நிரந்தரம் செய்யப்படும்' எனக் கூறி வருகின்றனர். இதற்காக, வரும் லோக்சபா தேர்தலில், ஆளும் கட்சி வேட்பாளரை, பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளோர், அவர்களை சார்ந்தோர் ஆதரிக்க வேண்டும் என, கோரி வருகின்றனர். மேலும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர் பயிற்சி முடித்து, அரசு பணிக்காக காத்திருக்கும், 55 ஆயிரம் பேருக்கும், அரசு வேலை வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க.,வினர் உறுதி அளித்து வருகின்றனர்.

    13 comments:

    Anonymous said...

    Nampathinka MLA election appo CPS cancel & sec. grd. teachers ku Grade pay change pannuvomnu poi solli emathi vote vanki pathavi sugatha anupavinkiranka.
    ''Be aware of Brutus''

    Anonymous said...

    same blood....same blood nambunga nan than MGR inum sagala vanthutaen....


    Anonymous said...

    Brithish govt decided to announce independence to india...apdi irukapa unga vaku....uruthi??????????

    Anonymous said...

    ஒரு வேளை சென்ற தமிழக அரசின் பட்ஜெட்டில் அதிக தொகையினை, மாநில அரசின் பங்காக, மத்திய அரசின் திட்டமாக அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைலருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் ஆகியவற்றிற்கு ஒதுக்கியிருப்பது பகுதிநேர ஆசிரியர்களின் மே மாத சம்பளம், ஊதிய உயர்வு தொகையாக இருக்குமோ?

    Anonymous said...

    ஒரு வேளை சென்ற தமிழக அரசின் பட்ஜெட்டில் அதிக தொகையினை, மாநில அரசின் பங்காக, மத்திய அரசின் திட்டமாக அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைலருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் ஆகியவற்றிற்கு ஒதுக்கியிருப்பது பகுதிநேர ஆசிரியர்களின் மே மாத சம்பளம், ஊதிய உயர்வு தொகையாக இருக்குமோ?

    Anonymous said...

    tamilan tamilan thanya epdi elam yosikirangaya....

    Unknown said...

    Bass. Nambatinga s.g. tr ku MLA election la kodutha vakurithiyaiye niraivetravillai. NAMBATHINGA Bass. ............

    Anonymous said...

    Velmurugan sir neenga secondy grade teacher a?

    Unknown said...

    Yes sir.

    Anonymous said...

    velmurugan sir nanga yarathan nampuratgam

    Anonymous said...

    nampatha nampatha intha tn govta nampatha

    Anonymous said...

    nampatha nampatha intha tn govta nampatha

    karthik pdkt said...

    இடைநிலை ஆசிரியர் பிரச்சனையை தீர்க்க வேணாம் என்னன்னு கூட கேட்கவவில்லையே.