Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 4, 2014

    தேர்தல் பணியாற்ற மறுத்த அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை

    தேர்தல் பணியாற்ற மறுத்த அரசு அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறான மருத்துவ சான்றிதழ் கொடுத்தவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.
    தேர்தல் பணிக்காக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் மற்றும் கரூர் தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தேர்தல் பணியை ஏற்க மறுத்த அலுவலர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 26 மற்றும் பிரிவு 134ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சுருக்கெழுத்தராக பணியாற்றும் அலுவலர் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    எனவே தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தவறாது தேர்தல் பயிற்சி வகுப்பு, தேர்தல் பணியில் கலந்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் பெயரில் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனுக்கள், மாவட்ட மருத்துவக்குழு முடிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    இதில் தவறான மருத்துவ காரணங்கள் என மருத்துவக்குழு முடிவு செய்யும் பட்சத்தில், அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

    2 comments:

    Anonymous said...

    srirangam CM thokithiyil particularly srirangam paguthiyil irukkum pallikalil oru kuripitta gents and lady teachers election duty kku panam koduthu deputy teachers change pnranga. VA.O panam petru change panranga.

    மனம் said...

    neraya pattatharigal velai vaippu inri ullanargal avargalai payanpaduth
    alame