Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 9, 2014

    பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாவில் குழப்பம்

    பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில் மாணவர்களை குழப்பும் வகையில் இடம்பெற்ற வினாவால் சர்ச்சை எழுந்துள்ளது.

    ஏப்.,7ல் நடந்த அறிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், 14வது வினா, 'ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் 1/3 எனில், அந்த ஆடியின் வகை என்ன,' என்பது கேள்வி. இதற்கு, 'குழி, குவி, சமதளம்' என பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கேள்விப்படி, குவி அல்லது குழி என இரு பதில்களும் சரியானவை. ஆனால், இந்த கேள்வியை, 'ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் நேரான மாயபிம்பம் 1/3 எனில், அந்த ஆடியின் வகை,' என்று கேட்டிருக்க வேண்டும். இக்கேள்விப்படி, 'குவி' என்பது சரியான பதில். குறிப்பிட்ட இந்த கேள்வியை, மாணவர்கள் குழப்பமான மனநிலையில் தான் பதில் எழுதியுள்ளனர். எனவே, 'ஆன்சர் கீ'யில், இக்கேள்விக்கு, எது சரியான பதில் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், 'சென்டம்' எடுக்கும் மாணவர்கள் இதனால் பாதிக்க வாய்ப்புள்ளது. விடைத்தாள் திருத்தும்போது தேர்வுத் துறை இக்குழப்பத்தை பரிசீலனையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

    5 comments:

    Anonymous said...

    Sir pls do the needful..give mark for both..

    vgttn said...

    10 ஆம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தில் பக்கம் எண் : 291 அட்டவணை எண் :17.2 - ல் குவி ஆடியில் அனைத்து நிலைகளிலும் மிகச்சிறிய புள்ளி அளவு மற்றும் சிறிய அளவிலான பிம்பத்தை உருவாக்குகிறது என உள்ளது. அதாவது உருப்பெருக்கம் 1 விட குறைவு என உள்ளது. எனவே 1/3 என்பது 1 விட குறைவு எனவே குவி ஆடி என்பது சரியான விடையாகும்.
    மேலும் அதுபோலவே குழியாடியில் பொருளின் நிலைப்பொருத்து பிம்பத்தின் தன்மை மாறும் என்பதை 10 ஆம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தில் பக்கம் எண் : 290 அட்டவணை எண் :17.1 - ல் முதல் இரண்டு நிலைகளிலும் மிகச்சிறிய புள்ளி அளவு மற்றும் சிறிய அளவிலான பிம்பத்தை உருவாக்குகிறது என உள்ளது.அதாவது உருப்பெருக்கம் 1 விட குறைவு என உள்ளது. எனவே 1/3 என்பது 1 விட குறைவு எனவே குழி ஆடி என்பதும் சரியான விடையாகும்.
    ஆகையால் வினா எண் - 14 இல் பொருளின் நிலைப்பற்றி குறிப்பிடதாதலால் இந்த இரண்டு (குவி ஆடி மற்றும் குழி ஆடி) விடைகளுக்கும் மதிப்பெண் வழங்கும்படி தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேலூர் மாவட்டத்தின் சார்பாக கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது

    Anonymous said...

    GOOD APPEAL !

    Anonymous said...

    Good... this is the same that we also send to the DGE DEPARTMENT

    Anonymous said...

    Government given mark for both convex and concave