Pages

Wednesday, April 30, 2014

அனுமதியின்றி பாடப்புத்தகங்களை எடுத்துச்சென்ற கல்வித்துறை ஊழியர் இடைநீக்கம்

அனுமதியின்றி பள்ளி பாடப்புத்தகங்களை எடுத்துசென்ற பழநி மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார். பழநி மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் சிவசண்முகம். இவர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 2005-06 கல்வியாண்டிற்கான பள்ளி பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்துசென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலையரசி விசாரணை நடத்தினார்.


விசாரணையில், கரையானால் அரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அவர் வெளியில் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்து சென்ற சிவசண்முகத்தை "சஸ்பெண்ட்"&' செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.