Pages

Monday, April 21, 2014

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். பார்த்திபனுக்கு ஆதரவு அளிப்பது என்று தென் மண்டல அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை, சிறப்பு ஆசிரியர்களாக தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு தீர்க்கப்படாத பிரச்னையாக இருந்த ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய விகித்தை வழங்கக்கூடிய அரசு ஆணை எண் 216-ஐ அமல்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்றும், மேலும் தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆதரவு அளிப்பது என்ற முடிவினை, நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஞாயிற்றுக்கிழமை இச் சங்கத்தின் தென் மண்டல தலைவர் கே. சுப்பிரமணியன் (சி. புதுப்பட்டி) தலைமையில் தேனி மாவட்டத் தலைவர் எஸ். ரெங்கசாமி (கம்பம்), மாவட்டச் செயலர் எஸ். சவரிமுத்து (ஆனமலையான் பட்டி), மாவட்ட பொருளாளர் என். தங்கராசு (போடி), நல்லாசிரியர் ஏ.சி. சிவபாலு (பெரியகுளம்), கந்தசாமி, வடிவேல் (ராயப்பன்பட்டி), சுரேஷ்குமார் (என்.டி. பட்டி) உள்பட பலர் தெரிவித்தனர்.

1 comment:

  1. pension vangitinga atarvu tharinga CPS irukarvanga mudintha vara atharvu tharanum thamilazhgam muluvathum yara thotra vaikanumnu..

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.