தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வரும் 24ம் தேதி மாற்றுத் திறனாளிகள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்க வசதி செய்து தரவேண்டும். இதற்கான சாய்வுதளங்களை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைக்க வேண்டும்.
சக்கர நாற்காலியில் வாக்குச் சாவடிக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளருக்கு உரிய உதவிகளை தேர்தல் அதிகாரிகள் செய்ய வேண்டும். அவர்களுக்கு சிறிய பெஞ்சுகளை வழங்கி வாக்களிக்க வழி ஏற்படுத்த வேண்டும்.
பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் பிரைலி எழுத்துக்கள் முறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. அது வாக்கு இயந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த வசதி உள்ளது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அனைத்து விதமான மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட வேண்டும். உடல் பலவீனமாக உள்ள வாக்காளர்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு வாக்குப் பதிவு வரிசையில் முன்னுரிமை அளிக்கும்படி ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பார்வையற்றவர்கள் மற்றும் பலகீனமான வாக்காளர்கள் வரும்போது அவர்களுடன் ஒருவர் துணைக்கு வரலாம். இந்த வழிமுறைகளை அனைத்து தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.