வானளாவிய அதிகாரமுள்ள தேர்தல் ஆணையத்தால் அடிப்படை வசதிகளைக்கூட ஏன் ஏற்படுத்தித் தர முடியவில்லை?
பெண் ஆசிரியைகளுக்கு அருகாமையில் பணி ஒதுக்கீடு செய்வதில்லை. ஆணையம் சொல்கிறது, ஆனால் பணி ஒதுக்கீடு செய்யும் அரசு ஊழியர்களின் அதிகார அலட்சியம் எதையுமே கவனிப்பதில்லை. ஆட்சியர் அலுவலகப்பணியாளரின் ஆசிரிய மனைவி, உறவினர்களாக இருப்பவர்களுக்கு விதிவிலக்கும் உண்டு.
தேர்தல் வகுப்புகள் என்றபெயரில் ஆசிரியர்களை அலைக்கழிக்கும் நிகழ்வு விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. நமக்கான குரலை நாம்தானே எழுப்பவேண்டும்?
அலட்சியம் அல்ல இந்த ஆசிரியர்கள் ஏமாந்தவர்கள் ,பயந்தவர்கள்.இப்போதெ கூறினால் அடுத்த தேர்தலில் மாற்றலாம்.
முதல்ல அது நமது கடமை,...நாட்டுக்காக சில சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ளுங்களேன்.....என்பது எல்லாம் ஓகே...
ReplyDeleteஆனால்......
* ஆசிரியர்களை வெகு தொலைவு தள்ளி நியமனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன..........?
ஆசிரியர்களை மட்டும் அதிகமாக நம்புவதால் தேர்தல் பணி வழங்கப்படுவதாக கூறுபவர்களே...அந்த ஆசிரியர்களை நம்பினால் வாழிடத்திற்கு அருகிலேயே நியமனம் செய்யலாமே....( ஒரே குழப்பமப்பா...)
* பயிற்சி வகுப்பை இவ்வளவு தொலைவு அலைகளித்து பயிற்சி அளித்தால் ஆசிரியர்களால் முழு மனதுடன் கற்க முடியாதே.....பயிற்சி அளிப்பதின் நோக்கமே நிறைவேறாதே.......
* பயிற்சியை சிறப்பாக நடத்த நினைக்கும் அலுவலர்கள் இது நாள் வரை பயிற்சி கையேடுகளை வழங்காதது ஏன்..........?
* பெண் தேர்தல் அலுவலர்கள் தேர்தலுக்கு முதல் நாள் வர வேண்டுமா....?அல்லது மறு நாள் பகலில் வந்தால் போதுமா......?
இந்த ஐயங்களுக்கு தீர்வுதான் என்ன..........?