Pages

Tuesday, April 29, 2014

பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி: மே 6ல் துவக்கம்

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்த சலுகை கடந்தாண்டு ஆகஸ்ட் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என, முதல்வர் ஜெயலலிதா கடந்த ஃபிப்ரவரி சட்டசபையில் அறிவித்தார். இதனால் ஆசிரியர் தகுதிதேர்வில் 150க்கு 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.
ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல் 89 மதிப்பெண் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் ஐந்து மையங்களில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே வாசவி வித்யாலயா பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வரும் 6ம் தேதி ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்குகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் கூறியதாவது: ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே மாதம் ஆறாம் தேதி துவங்குகிறது. திருச்சியில் வாசவி வித்யாலய பள்ளியில் இந்த பணி நடக்கிறது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 1,086 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது. மே 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.