Pages

Saturday, April 19, 2014

ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு வாரன்ட் பிறப்பிப்பு

கேந்திரபாரா: ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 5 சட்டசபைத் தொகுதிக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.
பகலில் வெயில் கொளுத்தியதால் வாக்குப்பதிவு குறைவாக இருந்தாலும், மாலையில் மக்கள் திரண்டு வாக்களிக்க வந்தனர். இங்கு 63% வாக்குகள் பதிவானது. நேற்றைய வாக்குப்பதிவின் போது, மஹாகல்பாடா தொகுதியில் நடந்த தேர்தல் பணிகளுக்கு வராமல் 54 அரசு ஊழியர்கள் புறக்கணித்தனர். இவர்கள் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.