தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வுகள் வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது. கோவை மாவட்டத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 16 முதல், தேர்வுகள் முடிந்துள்ளன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தற்போதும் வகுப்புகள் நடந்து வருகின்றன.
இம்மாணவர்களுக்கு வரும் 21ம் தேதி முதல் மூன்றாம் பருவ தேர்வுகள் துவங்குகின்றன. கோவை செல்வபுரம் (வடக்கு) மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கோதைநாயகி கூறுகையில், &'&'மாணவர்களுக்கு வரும் 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை மூன்றாம் பருவ தேர்வுகள் நடக்கவுள்ளது. தற்போது அதற்கான பயிற்சி தேர்வுகள் நடத்தி வருகிறோம். தேர்தலை முன்னிட்டு 23, 24, 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி இறுதி வேலைநாளாக பள்ளிகள் செயல்படும். மே 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும்&'&' என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.