Pages

Monday, April 14, 2014

வி.ஏ.ஓ. தேர்வு: விண்ணப்பிக்க நாளை (ஏப். 15) கடைசி நாள்

தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஏப். 15) கடைசி நாளாகும்.

தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது.வரும் ஜூன் 14-ம் தேதி இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை www.tnpscexams.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப். 15) கடைசி நாளாகும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்க்கு ஏப்ரல் 17ம் தேதி கடைசி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.