Pages

Wednesday, April 2, 2014

ஆங்கிலம் முதல் தாள் மிக எளிது: 10ம் வகுப்பு மாணவர்கள் கருத்து

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில், கேள்விகள் மிக எளிதாக இருந்தன,'' என மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர். ஏ.நவீன், செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: கேள்விகள் மிக எளிமையாக இருந்தன. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடிந்தது. ஒன்றரை மணி நேரத்திற்குள் தேர்வு எழுதி முடித்து விட்டேன். பதிலை, ஒன்றுக்கு பல முறை திருப்பி பார்க்க வசதியாக இருந்தது.

எஸ்.சம்சத் நிஷா, கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி: 1, 2, 5 மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. 'பாராகிராப்', மனப்பாட பாட்டு பகுதி கேள்விகள், மிக சுலபமாக இருந்தது. புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. 'புளூ பிரின்ட்' அடிப்படையிலேயே அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. சாதாரணமாக படிப்பவர்கள் கூட, அதிக மதிப்பெண் பெறுவர்.

ஆர்.பூமிநாதன், ஆசிரியர், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ராமேஸ்வரம்: 'படம் பார்த்து விடை எழுது' பகுதியில் படங்கள் தெளிவாக இல்லாததால், விடை எழுதுவதில் சிரமம் இருந்திருக்கும். சராசரி மாணவர்களுக்கு கூட, 80 மதிப்பெண் கிடைக்கும். நன்றாக படிக்கும் மாணவர்கள் நூறு மதிப்பெண் அள்ளுவர். இம்முறை, மாநில அளவில் ஆங்கில தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.