மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாக நிரப்ப வேண்டும் என்றும் அவ்வாறு நிரப்பப்படாத விண்ணப்பங்கள் தானாகவே நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
வேட்பாளர்கள் தங்கள் சொத்து மற்றும் குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை வேட்புமனுவில் தெரிவிக்காவிட்டால், அவற்றை தேர்தல் அதிகாரியே நிராகரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. இதையடுத்து ஆன்லைன் வேட்புமனு தாக்கலிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இ-பைலிங் முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பும் வேட்பாளர்கள் அது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும். வேட்பா ளர்களின் வசதிக்காக வேட்பு மனுவை பிரதி எடுத்துக் கொள்ளும் வசதியும் இணையதளத்தில் தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.