Pages

Thursday, March 20, 2014

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: ஊதிய நிலுவையை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை தொகையை வழங்குமாறு அங்கன்வாடி ஊழியர்கள் மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.ஆலந்தூர், ஆதம்பாக் கம், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள 56 அங்கன்வாடி ஊழியர்கள் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் 2 மாதம் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஊதியமாக இரு மாதங்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், பணி முடிந்த பிறகு அவர்களுக்கு ரூ.10,000 மட்டுமே கொடுத்துள்ளனர். நகராட்சி அலுவலகம், கடந்த 2011ல் மாநகராட்சி மண்டல அலுவலகமாக மாறியது. மீதி தொகையை பெறுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை அளிக்கவில்லை.இந்நிலையில், நேற்று 25க்கும் மேற்பட்டோர் மண்டல அலுவலகத்தில் முற்றுகை யிட்டனர். பணத்தை உடனே வழங்க வேண்டும் என கூறினர்.தகவல் அறிந்ததும் மண்டல அலுவலர் மகேசன், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உங்கள் பணம் பெற்றுத்தரப்படும் என உறுதி அளித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.