கல்லிடைக்குறிச்சி அருகே மேல ஏர்மாள்புரத்தில் தலைமை ஆசிரியையை அடித்த ஆசிரியரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அகஸ்தியர்பட்டி, மின் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் முருகன் (35). இவர் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேல ஏர்மாள்புரம், அரசு ஆதிதிராவிட நலத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
அதேப் பள்ளியில் திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்த பூமிபாலகி (44) என்பவர் தலைமையாசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமைக் காலை முருகன் பூமிபாலகியிடம் ஒயிட்னர் பேனா கேட்டாராம். அதற்கு பூமிபாலகி இல்லை என்றாராம். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். அதில் முருகன் பூமிபாலகியை எதிர்பாராதவிதமாக கையால் கன்னத்தில் அறைந்தாராம். இதனால் கீழே விழுந்து காயம்பட்ட பூமிபாலகி கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தாராம்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் பூமிபாலகியை முருகன் அவதூறாகப் பேசி கையால் தாக்கிக் காயப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது ஒரு பிழைப்பா? ஆசிரியர்களுக்கு உள்ள தகுதியை கெடுக்கிறார்கள்.
ReplyDeleteகண்ணியத்தோடு செய்ய வேண்டிய பணி. ஈகோவில் இருக்கிறார்கள். இவர்களால் பிறருக்கு அசிங்கமாக உள்ளது.
HM and asst ku misunderstanding irunthal ippadithan teachers can control theirself no ego
Deleteunmaiyana karanam yannavenru hm ku than therium whitner kaga adithathu yetrukollamudiyala
ReplyDelete