விஏஓ தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட வயதுவரம்பைத் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 1.7.74க்குப் பின்பும், 1.7.93க்கு முன்பும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற குரூப்4 தேர்விற்கு பிளஸ்2 மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ளவர்கள் 57 வயது வரை உள்ளவர்கள் தேர்வு எழுதினர். ஒரே கல்வித்தகுதி கொண்ட தேர்வுகளில் வயது வரம்பை வேறுபாடாக தேர்வாணையம் நிர்ணயித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விஏஓ தேர்விற்கு 40வயது என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3, 4 ஆண்டுகளாகத்தான் அதிகளவில் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய நிர்ணய வயது வரம்பால் ஏராளமானோர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும்.
கடந்த 3 முறை விஏஓ தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குரூப்2, குரூப்1 பணிகளுக்குச் சென்று விட்டனர். இதனால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப 7வது, 8வது என்று பலகட்ட கலந்தாய்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே குரூப்4 தேர்வைப் போல விஏஓ தேர்விற்கும் வயது வரம்பைத் தளர்த்த வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.