Pages

Monday, March 31, 2014

மாணவரை தாக்கிய ஆசிரியை மீது புகார்

சாப்பிட சென்ற மாணவரை, எல்லோரது முன்னிலையிலும் பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவரின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர்.


குமாரபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், ரத்தினம் தம்பதியரின் மகன் சந்தோஷ் 15. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறார். தற்போது, அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு முடிந்துள்ளது. ஆங்கிலம் முதல் தாள், நாளை (ஏப்., 1) நடக்கிறது. அதற்காக சிறப்பு வகுப்புக்கு மாணவர்களை நேற்று, பள்ளிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

சிறப்பு வகுப்புக்கு, மாணவர் சந்தோஷ் சாப்பிடாமல் வந்துள்ளார். பசியின் காரணமாக, ஆசிரியரிடம் சொல்லாமல் வெளியே சென்றார். அப்போது பின்னால் சென்ற ஆசிரியை வசந்தி, பள்ளி கேட் முன் மாணவர் சந்தோஷை மரித்து, பிரம்பாலும், கையாலும் சரமாரியாக தாக்கினார். அதில் வலி தாங்க முடியாமல் மாணவர் கதறினார்.

ஒரு வாரத்துக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பள்ளிக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வீட்டுக்குச் சென்ற சந்தோஷம், தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் செய்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.