Pages

Tuesday, March 4, 2014

பள்ளிகள் கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் : ஆசிரியர் ஸ்டிரைக் முடிவுக்கு அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், மார்ச் 6ம் தேதி, வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர்; அன்று, அனைத்து பள்ளிகளும், கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தர வேண்டும்; தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்;
தொடக்கக் கல்வியில், தமிழ் வழி பாடத்திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின், கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்), மார்ச் 6ல், மாநிலம் தழுவிய, வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. ஆனால், மார்ச் 6ம் தேதி, பள்ளிகள் கண்டிப்பாக செயல்பட வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது. அன்று, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்றுனர்கள், ஆசிரியர்களாக நியமிக்க, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

டிட்டோ ஜேக் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறேன் என, ஒவ்வொரு ஆசிரியர்களிடமும், தனித்தனியாக கையெழுத்து வாங்கியிருக்கிறோம். கையெழுத்து போட்ட ஆசிரியர்கள் பட்டியல், மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் விரும்பினாலும், பணிக்கு செல்ல முடியாது. எனவே, 6ம் தேதி, எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர்களை நியமித்தாலும், பெரும்பாலான பள்ளிகள், ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியபோது, தமிழக அரசு, இதே போல, எச்சரிக்கையும், மாற்று ஊழியர்களை பயன்படுத்தியதையும், தற்போது, ஆசிரியர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என, அரசியல் பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார். 

2 comments:

  1. ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு மாற்றுப்பணி. அப்படின்னா முதல்வர் கொடநாடில் ஓய்வு எடுக்கையில் கோட்டைக்கு மாற்றுப்பணியில் எந்த முதல்வர் இருந்தார்

    ReplyDelete
  2. Ha.. Ha... Ha....
    Acceptable commentary and nose-cut comment

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.