பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு வசதியாக, 12 மணி நேரம் செயல்படும் வகையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்வு, நாளை துவங்கி 25ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு தேர்வு 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 9ம் தேதி வரையிலும் நடக்கிறது. தேர்வு தொடர்பான தகவல்கள், புகார்கள், குறைகள் உள்ளிட்ட பிரச்னைகளை தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு, அதிகாரிகள் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
காலை 8:00 மணி முதல் பகல், 2:00 மணி வரை ஒரு, குழுவினரும், 2:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இன்னொரு குழுவினரும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவர். 044-2827 8284, 044-2827 8286, 044-2827 2088 ஆகிய தொலைபேசி எண்களில், கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.