Pages

Sunday, March 30, 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே புதிய நியமனம்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.


அமைப்பின் எருமப்பட்டி, திருச்செங்கோடு, ராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல் ஆகிய 5 ஒன்றியக் கிளைகள் தொடக்க விழா நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வே.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.நடேசன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் க.தனசேகரன், மாவட்ட துணைச் செயலர்கள் பெ.சரவணக்குமார், பி.கருப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சா.கண்ணன், மு.வெங்கடாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலர் சு.ஈசுவரன் புதிய கிளைகளைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்கிட வேண்டும், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவியுயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவர் கே.காமராஜ், மாநிலப் பொருளாளர் அ.ஜோசப் சேவியர், மாநில துணைத் தலைவர் வி.எஸ்.முத்துராமசாமி, மாவட்டப் பொருளாளர் கு.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3 comments:

  1. neenga niraivetrathu irukatum.melidam ene pana poranganu solunga mothala

    ReplyDelete
  2. இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வா??
    என்ன சொல்றீங்க!
    அதான் பள்ளிக்கல்வித்துறையில்கொடுத்திட்டோமே!!
    என்னது??
    தொடக்கக்கல்வித்துறையிலா?
    அட போங்கப்பா....
    வேற பொழப்பில்லயா எங்களுக்கு??

    ReplyDelete
  3. Useless association.useless education secretary.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.