Pages

Wednesday, March 19, 2014

10ம் வகுப்பு தேர்வு: மாணவர்கள் தயாராக ஒருவாரம் விடுமுறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, இன்னும், ஏழு நாட்களே உள்ள நிலையில், தேர்வுக்கு, மாணவ, மாணவியர், சிறப்பாக தயாராவதற்கு வசதியாக, பல தனியார் பள்ளிகள், ஒரு வாரம், விடுமுறை அறிவித்து உள்ளன.வரும், 25ம் தேதியுடன், பிளஸ் 2 தேர்வு முடிகிறது. மறுநாள், 26ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது.
இதற்கு, இன்னும், ஒரு வாரம் மட்டுமே உள்ளது.அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை முடித்துவிட்ட மாணவ, மாணவியர், எழுத்து தேர்வுக்கு, ஆயத்தமாகி வருகின்றனர்; பள்ளிகளில், மாணவருக்கு, இறுதிகட்டமாக, தேர்வு நுணுக்கங்கள், ஆலோசனை வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தேர்வெழுத உள்ள, 10 லட்சம் மாணவ, மாணவியருக்கும், தேர்வுத்துறை இணையதளத்தில், ஓரிரு நாளில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட உள்ளன. இதற்காக, தேர்வுத்துறை, ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனி, 'லிங்க்' வசதியை கொடுத்துள்ளது.தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில், ஒவ்வொரு பள்ளியும், தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து, தங்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஹால் டிக்கெட்டுகளை, பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு, வழங்குவர். வரும், 20 அல்லது, 21ம் தேதியில், ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, கடைசி நேரத்தில், மாணவர்கள், தேர்வுக்கு, நல்ல முறையில் தயாராவதற்கு வசதியாக, பல தனியார் பள்ளிகள், இன்று முதல், விடுமுறை அறிவித்து உள்ளன

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.