Pages

Monday, March 24, 2014

விரைவில் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க திட்டம்


தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளது.


தமிழகத்தில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள்
ஒருங்கிணைந்து தமிழகத்தில் ஒரு தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவுள்ளது. இதற்கான கொள்கைகள், சட்டத்திட்டங்கள், வரையரைகள், விதிமுறைகள் ஆகியவைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

சிதம்பரத்தை மையமாக கொண்டு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற ஏப்.20-ம் தேதி சென்னையில் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து மாநில அளவில் கூட்டத்தை கூட்டி, அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளனர் என அச்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்எல்சியுமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தார்.

2 comments:

  1. SCHOOLA KUTTI SUVARA AAKINATHU POOTHATHAA? IPO NAATAIYUM NAASAMA AAKKA PORINKALAAKKUM.........

    ReplyDelete
  2. ungala madiri manithargal elam edarku teaching line ku varinga?katchi arambikaratha vitu unga students a epdi munetralam nu parunga.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.