Pages

Sunday, April 13, 2014

தேர்தல் பணி - பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வர வேண்டியதில்லை, பகலில் வந்தால் போதும்: தேர்தல் ஆணையம்

மார்ச் 15ம் தேதி தமிழக தேர்தல் ஆணையரின் பத்திரிக்கை செய்தி: 
"தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்படுகின்றனர்.
போதிய அரசு ஊழியர் இல்லாத மாவட்டங்களில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர்களை பணியமர்த்த, தேர்தல் கமிஷன், அனுமதி வழங்கி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்களை, அவர்கள் வசிப்பிடத்தில் இருந்து, இரண்டு மணி நேர பயண தொலைவிற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில், பணி அமர்த்த வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. எனவே, பெண்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்க வேண்டியதில்லை. பகலில் வந்தால் போதும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள், பணிக்கு வர முடியாத நிலையில் இருந்தால், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, விண்ணப்பிக்க வேண்டும். அவர் இறுதி முடிவெடுப்பார். தேர்தல் பணிக்கு வராத ஊழியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

  1. ஐயா,உங்கள் உத்தரவை காற்றில் பறக்க விட்டு 4500 தர ஊதியம் பெறும் என்னை மை வைக்க விட்டுட்டாங்க.இந்த அறிவிப்பு பட்டமாக பறக்கும்போது பாருங்கள் ..

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.