Pages

Friday, March 21, 2014

பொது தேர்வுகளில் எந்த மாதிரி பேனாக்களை பயன்படுத்தலாம்

பொது தேர்வுகளில் நீல, கறுப்பு நிற மை பேனாக்களையும், அந்த நிறத்தில் உள்ள "ஜெல்" பேனாக்களையும் விடை எழுத பயன்படுத்தலாம் என கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது. பொது தேர்வுகளில் விடை எழுத, பெரும்பாலான மாணவ, மாணவியர் நீல நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர்.
சிலர் கறுப்பு நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர். இத்துடன், "ஜெல்" பேனாவை பயன்படுத்தலாமா என்ற குழப்பம், மாணவர் மத்தியில் நிலவுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பச்சை, சிவப்பு மற்றும் ரோஸ் நிற மை மற்றும் அதே நிறமுள்ள "ஜெல்" பேனாக்களை மட்டும் பயன்படுத்தக் கூடாது. மற்றபடி, "நீல, கறுப்பு நிற மை பேனாக்களையும், அந்த நிறத்தில் உள்ள, "ஜெல்" பேனாக்களையும், விடை எழுத பயன்படுத்தலாம். பொதுவாக முக்கியமான கருத்துக்களை, அடிக்கோடு இடுவதற்குத் தான், கறுப்பு நிற மை பேனாவை, மாணவர் பயன்படுத்துகின்றனர்; இதில், தவறில்லை. முக்கிய பகுதி எடுப்பாகவும் தெரியும். இதர விடைகளை எழுத நீல நிற மை பேனா அல்லது, "ஜெல்" பேனாவை பயன்படுத்துவது சிறந்தது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். தேர்வுத்துறை அலுவலர்களும், இதே கருத்துக்களை தெரிவித்தனர்

2 comments:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.