Pages

Saturday, March 1, 2014

மார்ச் 6ல் ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்': ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

மார்ச் 6 ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், பிப்., 25, 26 ல் போராட்டம் நடத்தினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, "டிட்டோஜாக்' அமைப்பினரும், மார்ச் 6ல், போராட்டம் அறிவித்துள்ளனர். இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்களை (டிட்டோஜாக்) சேர்ந்த, ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், ""மதுரை மாவட்டத்தில் 3,000 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். எங்கள் கோரிக்கை குறித்து, கல்வி அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டவில்லை. இதனால், வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது கல்வித் துறை எடுத்த நடவடிக்கைகளையும் வாபஸ் பெற வேண்டும்,'' என்றார்.

5 comments:

  1. 26 பிசுபிசுத்து போய்விட்டது. ஒன்றுபட்டு போராடுங்க

    ReplyDelete
  2. sonnapadi 1 lakh teachers compulsory

    poraduvom.dont worry about govt edukkum actions

    ReplyDelete
  3. Very very urgent for take immediate action
    2013 இல் டேட் தேர்வில் 90 மார்க்கு மேல் எடுத்து cv முடித்து இருக்கிறோம் தற்பொழுது 82 முதல் 89 மார்க் வரை எடுத்தவர்களை cv இகு அழைத்திருக்கிறார்கள் அடுத்து 2012 இல் 82-89 மார்க் எடுத்தவர்களை அழைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் குறைந்தது அவர்கள் 20 ஆயரம் (2012 &2012 சப்ப்ளிமேண்டரி ) பேர் இருப்பர்கலாம் இதனால் cv முடித்த எதிர்பர்கப்ப் படுகின்ற 15 ஆயரம் பேருக்கும் பணி கிடைப்பது கஷ்டம் weightage 80 முதல் அதற்க்கு மேல் இருந்ந்தாலும் பணி கிடைப்பது அரிது அதனால் cv முடித்த அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோ RELAXATION And ் tet weightage நீக்க கோரி பாதிக்கப்பட்ட அனைவரும் 03.03.14 திங்கள் அன்று trb அலுவலகம் முன்பும் பின்பு சேப்பாக்கதிலும்நடைபெறும் ஆர்ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன
    ்இப்படிக்கு
    சேலம் பிரபாகரன் 9944315150
    ஈரோடு சுகந்தி 7845960012
    தஞ்சஓர் கார்த்திகா 9952946145
    மதுரை தசரதன் 9787021959
    குமிடி பூண்டி ராஜேந்தரன் 7871835631
    திருநெவேலி பனெட் 8190073640
    மதுரை ஸ்டாலின் 9952198486
    திண்டுகள் ஹரி 8760561190
    திண்டிவனம் நாராயண மூர்த்தி 9788895017
    ஆத்தூர் சுசீலா 8883316447
    பெரம்பூர் மாதவி 9840612094
    கரூர் காளியப்பன் 9843140600
    எஞ்சேல் தாமஸ் 9791008103

    தயவு செய்துஇந்த தகவலை சமுக வலை face book , twitter.,,, போன்றவை முலம் பரப்பவும

    ReplyDelete
  4. இப்போது ஒரு அணி விளக்கம் கொடுக்க அடுத்தது நீங்கள்

    ReplyDelete
  5. இ நி ஆசிரியர் களே சங்கம் பின்னால் போனால் ஒரு நாள் சம்பளம் நமக்கு முன்னால் போயிடும்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.