Pages

Monday, March 31, 2014

தமிழகத்தில் 40 அஞ்சலகங்களில் சி.பி.எஸ்., திட்டம் அறிமுகம்

நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகங்களில் வரும், 2016ம் ஆண்டுக்குள், "கோர் பேங்கிங் சிஸ்டம் - சி.பி.எஸ்., வசதி செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இதுவரை, 40 அஞ்சலகங்களில், இவ்வசதி செய்யப்பட்டுள்ளன. அஞ்சல்துறையில், "கோர் பேங்கிங்' வசதியை ஏற்படுத்த, "எங்கேயும், எப்போதும்' என்ற தலைப்பில், மத்திய அரசு, 700 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. சென்னை, தி.நகர் தலைமை அஞ்சலகத்தில் துவங்கி, மாநிலம் முழுவதும், 40 அஞ்சலகங்களில், சி.பி.எஸ்., திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அஞ்சலகங்களில் உள்ள வாடிக்கையாளர் களின் சேமிப்பு கணக்கு மற்றும் அஞ்சலக தொடர் வைப்பு திட்டம் (ரெக்கரிங் டெபாசிட்) கணக்குகள், சி.பி.எஸ்., திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன. அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர், "கோர் பேங்கிங்' வசதி உள்ள, எந்த ஒரு அஞ்சலகத்தில் இருந்தும், பண பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம். இத்திட்டத்திற்கான பிரத்யேக மென்பொருளை, பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் வடி வமைத்து கொடுத்துள்ளது. கோர் பேங்கிங் வசதி செய்யப்பட்டுள்ள அஞ்சல கங்கள் விவரம்: சென்னை: அண்ணாசாலை, தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம், பழைய கல்லூரி சாலை, கோபாலபுரம், திருவல்லிக்கேணி, மேற்கு மாம்பலம், பல்லாவரம், எத்திராஜ் சாலை, எழும்பூர் மற்றும் கிரீம்ஸ் சாலை அஞ்சலகம். மதுரை மண்டலம்: காரைக்குடி, சிவகாசி, பழநி, நெல்லை, திண்டுக்கல், பாளையங்கோட்டை, வீரப்பன்சத்திரம், பள்ளிபாளையம், வள்ளியூர், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகம், சங்கர் நகர், பேகம்பூர், செசரி வளாகம் மற்றும் முத்துப்பட்டினம் அஞ்சலகம். கோவை மண்டலம்: பவானி, உதகை, கோவை தலைமை அஞ்சலகம், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், ராசிபுரம் மற்றும் கோவை சென்ட்ரல் அஞ்சலகம். திருச்சி மண்டலம்: திருச்சி தலைமை அஞ்சலகம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை தலைமை அஞ்சலகம். இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறுகையில், "நாடு முழுவதும் உள்ள, 28, 840 தலைமை அஞ்சலகங்களிலும், 2016ம் ஆண்டிற்குள், "கோர் பேங்கிங்' வசதி செய்யப்பட உள்ளது' என்றனர். "கோர் பேங்கிங்' என்றால் என்ன? : ஆங்கிலத்தில், "சென்ட்ரலைஸ்ட் ஆன்லைன் ரியல்டைம் எலக்ட்ரானிக் பாங்கிங்' என்பதன் சுருக்கமே, கோர் பாங்கிங். இந்த முறையில், கிளை அலுவலகங்கள் அனைத்தும், மத்திய சர்வருடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு கிளையில் மேற்கொள்ளப்படும் பணிகள், மத்திய சர்வரில் உடனுக்குடன் பதிவாவதால், எந்த கிளைகளில் இருந்தும், வாடிக்கையாளர்கள், பணம் எடுக்கவோ, செலுத்தவோ முடியும். இந்த முறை, பெரும்பாலான, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பின்பற்றப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.