பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, தமிழகம் முழுவதும் நாளை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, எட்டு லட்சத்து 26 ஆயிரம் மாணவ, மாணவியர் கடந்த, 3ம் தேதி முதல் எழுதி வருகின்றனர். தேர்வில் எவ்வித குளறுபடியும் ஏற்படக் கூடாது என்பதற்காக, தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதேபோல் விடைத்தாள்கள், தனியார் பார்சல் வேன் மூலமாக, விடைத்தாள் கட்டுக்காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில், நாளை விடைத் தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது. முதன்மை தேர்வாளர் தலைமையில், ஒரு கூர்ந்தாய்வாளர், ஆறு உதவி தேர்வாளர் குழு அமைக்கப்பட்டு, விடைத் தாள்கள் திருத்தம் பணி நடக்க உள்ளது. "நாளை முதல், பிளஸ் 2 தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட விடைத்தாள் மையத்தில், பாட வாரியாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்" என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.